இலங்கையில் நடுகல் – 3

பொலன்னறுவை அருங்காட்சியகத்தில் இருக்கும் இன்னொரு நடுகல் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படம். இதில் இருபுறமும் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது. வீரன் ஒருவன் தனது வலது கையில் ஒரு ஆய்தத்தை ஏந்தியவாறு உள்ளான். இடுப்பில் ஒரு அங்கி. கை,கால், கழுத்து, காதில் அணிகலன், தலை அலங்கரிப்பு ஆகியவற்றை பார்க்கபோனால் எதோ ஒரு குறுநில தலைவன் போன்ற தோற்றம். இடது கையில் ஏதோ ஒரு பொருள். என்னவென்று தெரியவில்லை. அருகே ஒரு பெண் வலது கையில் ஒரு விசிறியுடன் உள்ளார். அப்படியே பின் பக்கம் பார்த்தால். ஒரு இருக்கை. ஒருவன் அதில் அமர்ந்துள்ளான். பார்க்க காலை அகட்டி வைத்திருப்பது போல இருந்தாலும் அவன் ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளான். தலையில் மகுடமும் உள்ளது. கழுத்து, கை, காது,காலில் அணிகலன்கள். நிச்சயம் ஏதோ ஒரு பகுதியில் தலைவன் போல உள்ளது. மேலே இருவர் உள்ளனர். அவனின் வேலையாட்களாக இருக்கலாம். ஆக இந்த ஒரு நினைவு கல். ஒரு தலைவனுக்காக எடுக்கப்பட்ட நினைவு கல்லாக இந்த நடுகல் இருக்கலாம். ஆனால் கீழே காவற்கார போர் வீரன் என்று எழுதியுள்ளனர். இப்புடைப்பு சிற்பத்தை நோக்கினால் இது சோழர் காலத்திற்கு பிறகானதாகவே உள்ளதாக திருச்சி பாரதி அவர்கள் கூறினார். இக்கல்லில் எந்த கல்வெட்டுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Like this article?

Share on Facebook
Share on Twitter
Share on Linkdin
Share on Pinterest

Leave a comment