சிங்களருள் தமிழர் மெய்யியல்

ஒரு சமயம் என்பது தோன்ற காரணமாய் அமைவது அது உருவான இடமும் அதை உருவாக்கிய மக்களுமே ஆவர். அந்த சமயத்தில் கூறுகள் யாவும் அந்த மண்ணை சார்ந்ததும் அந்த இன மக்களின் பண்பு சார்ந்ததுமாய் இருக்கும். ஆப்ரகாமிய மதங்கள் யாவும் யூத தேசிய இனத்தில் இருந்து உருவானவை. இன்று ஆங்கிலேயர், செருமானியர், அரேபியர் என்று பல்வேறு தேசிய இனங்களாக இருக்கும் மக்கள் ஒரு காலத்தில் யூத இனமாகவே இருந்தனர். இப்படி தான் நம் ஊரிலும். நமது இலங்கை தீவானது தமிழரின் பூர்வீக நிலம். நமது தேசத்து நிலம் அது. எப்படி இன்றைய இந்திய பகுதியில் தமிழ்தேசிய இனம் தெலுங்கு, கன்னடர், மலையாளர் என்று பல்வேறு தேசிய இனங்களாக பிரிந்து, கலாசார ரீதியிலும் சில பல மாற்றங்கள் அடைந்தாலும் இவ்வினங்களுக்குள் சமயம் போன்ற ஒற்றுமை இன்னமும் அப்படியே உள்ளதோ. அதே போல் தான் இலங்கையிலும். மகாவம்சம் போன்ற கப்சா கதைகளை வைத்து முட்டாள் தனமாக சிங்களர் எல்லாரும் ஏதோ வட இந்தியாவில் இருந்து வந்ததாகவும் அவர்களுக்காகவே புத்த மதம் அங்கு வந்தடைந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆனால் உண்மையோ அவர்களில் பெரும்பாளுமானோர் ஒரு காலத்தில் தமிழினத்தவரே. இந்தியாவில் மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னரும் ஆந்திர, கர்நாடக, கேரள பகுதிகளிலில் வாழ்ந்த பூர்வ குடி தமிழர் பலரும் தங்கள் அடையாளம் இழந்து தெளுங்கரகவோ, கன்னடராகவோ, மாறிவிட்டனர். இது இன்னமும் நடக்கிறது. இதற்கு பல்வேறு காரணிகள் உண்டு. அவர்களுக்கு தங்கள் மொழி, பண்பாடு பற்றி சொல்லிகொடுக்கவோ அறியவோ வாய்ப்பில்லை. இதே போல் தான் இலங்கையிலும் பழங்காலங்கள் கூட செல்ல வேண்டாம் ஆங்கிலேயர் காலத்தில் தமிழராய் இருந்தோர் பலரே இப்போது தங்களை சிங்களராக நம்பி தமிழர் என்னும் அடையாளம் இழந்து சிங்களராய் மாறியுள்ளனர். இப்படி பல்வேறு காலக்கட்டத்தில் இலங்கை தீவில் இருந்த தமிழர் பலருமே சிங்களராய் மாறியுள்ளனர். (சிங்கள மொழி மற்றும் இனத்தின் தோற்றம் குறித்து வேறு பதிவில் காண்போம்.)

என்ன தான் வேறு இனமாக மாறினாலும் அவர்கள் பண்பாட்டு ரீதியில் தமிழருடன் பெரிதும் ஒத்துபோகின்றனர். குறிப்பாக சமய மற்றும் வழிபாடு ரீதியில். எது? சமயமா? சிங்களர் முழுவதும் புத்த மதத்தினராயிற்றே என்று சிந்தனை வரும். ஆனால் அது எப்போது இங்கு கொண்டு வரப்பட்டது என்பதை அறிய வேண்டும். இதை வேறு பதிவில் காணலாம். என்ன தான் புத்த மதம் சிங்களரிடம் புகுத்த பட்டாலும் அவர்களில் பெரும்பாளுமானோர் இன்னமும் தங்களின் கடவுளர்களை வழிபடுவதை நிறுத்த படவில்லை. ஆம்! சிவன், முருகன், பிள்ளையார், கண்ணகி, இந்திரன், என்று தமிழரின் கடவுள்களை அவர்களும் வழிபடுகின்றனர். ஏன் சொல்லபோனால் எனது பயணத்தின் போது பல சிங்களரின் முருக பக்தியை கண்டு அசந்தே போனேன். அவர்கள் என்னதான் புத்த மதத்தினரானாலும் இன்னமும் இதை விட்டு கொடுக்கவில்லை. ஆம்! ஒவ்வொரு சிங்களரின் வீட்டிலும் நீங்கள் சிவன், பிள்ளையார் படங்களை காணலாம். ஓடும் அனைத்து பேருந்துகளிலும் சிவன், முருகன், பிள்ளையார், விட்னு, புத்தர், இந்திரன் ஆகியோரின் படங்களை காணலாம். கண்ணகியையும், மாரியம்மனையும், காளியையும் வழிபடாத கிராமப்புற சிங்களரே இல்லை எனலாம்.

இப்படி சிங்களர் இடையே பின்னி பிணைந்துள்ளது தமிழரின் வழிபாட்டு முறைகளும், தமிழர் சமயமும். ஆனால் அவர்கள் வணங்குவதெல்லாம் எதோ புத்த கடவுள்கள் என்றும் புத்தரின் காவலர்கள் என்றும் நம்பவைக்கப்பட்டுள்ளனர். எப்படியெல்லாம் இலங்கையில் புத்த மதம் பிற நாட்டு  புத்த மதத்தில் இருந்து வேறு படுகிறது. எப்படியெல்லாம் தமிழர் கடவுள்கள் புத்தமயமாக்கபட்டுள்ளனர் (இந்தியாவில் இந்துமயமாக்கபட்டது போலவே). எப்படியெல்லாம் தமிழர் கோயில்கள் புத்தரின் விகாரியாகிறது போன்றவை அடுத்த அடுத்த பதிவுகளில் காண்போம்.

நன்றி

வேல்கடம்பன்

Extracted Keywords:

    Like this article?

    Share on Facebook
    Share on Twitter
    Share on Linkdin
    Share on Pinterest

    Leave a comment