இலங்கையில் நடுகல் – 2

எனது முந்தைய பதிவில் அடியேன் ஈழம் சென்ற போது பொலன்னறுவை அருங்காசியகத்தில் இரண்டு நடுகற்கள் கண்டதை பதிவிட்டு இருந்தேன். அவற்றை பற்றி இப்பதிவில் காண்போம்.

கங்க காலம் பின்னர் சோழ அரசு மீண்டும் பேரரசாய் உருபெற்று தனது எல்லை பரப்பை விரிவாக்கி கொண்டிருந்த பொது தெற்கே ஈழ மண்டலத்தையும் கைப்பற்றினர். மதுரையும் ஈழம்மும் கொண்ட கோப்பரகேசரி என்று முதலாம் பராந்தக சோழர் அறியப்பட்டார். காரணம் இவர் காலத்தில் தான் மீண்டும் ஈழம் சோழர் வசமானது. இவருக்கு பின்னர் வந்த அரசர்கள் பலரும் இலங்கையில் போர்கள் செய்து அத்தீவை முழுமையும் கைவசம் படுத்தினர். இலங்கை தீவை முழுவதும் கைப்பற்றியது மாமன்னர் இராசேந்திர சோழராவார். இவரின் காலத்தில் ஈழ மண்டலத்தின் தலைமை இடமாய் இயங்கிய இடத்தின் பெயர் ஜனநாத மங்கலமாகும். இவ்வூர் தான் பொலன்னறுவை! இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள இவ்வூர் இலங்கை வரலாற்றை முக்கிய இடம் பெற்றதாகும். சோழ அரசாலும், பின்னர் வந்த சிங்கள அரசாலும் தலைனகாராய் கொண்டு செயல்பட்ட ஊர் இது. இவ்வூரில் தான் மாமன்னர் இராசேந்திர சோழர் எழுப்பிய கோயில்களும், அரண்மனைகளும் உள்ளன (வேறு பதிவுகளில் காண்போம்). இங்கே உள்ள தொல்லியல் தளத்தில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது. இங்கு தமிழர், சிங்களர் சார்ந்த அனைத்து தொல்லியல் சான்றுகளும் உள்ளன. இதில் சோழ அரசின் காலத்தை சேர்ந்த கடவுளர் சிலைகள் போன்ற பல தொல்லியல் சான்றுகள் ஒரு இடத்தில் காட்சிபடுத்தபட்டிருக்கும். அதில் தான் கண்டேன் இரு நடுகற்களை.

நடுகல் ஒன்று:

ஒரு வீரர் சம்மணம் இட்டு அமர்ந்த நிலையில் உள்ளார். இடுப்பில் ஒரு அங்கி. இரு கைகளிலும் அணிகலன்கள் போட்டுள்ளார். கழுத்தில் ஒரு அணிகலன் உள்ளது. இடதுபுறமாக சாய்ந்த கொண்டை. காதில் ஒரு தொங்கட்டான் இருப்பது போல் தெரிகிறது. ஒரு நீண்ட கூரிய வாள். கைபிடியை தனது வளதுகையிலும் இன்னொரு முனையை தனது இடது கையிலும் ஏந்தி கழுத்தில் வைத்துகொண்டு தனது தலைவனுக்காகவோ தனது படை வெற்றி பெற வேண்டியோ, தன் மக்களுக்காகவோ வெற்றி வாகை வேண்டி தன்னை தானே கொற்றவை முன் பலி கொடுக்கிறார் அவ்வீரர். அப்போதும் அவன் முகத்தில் புன்னகை தான். இக்காட்சி ஒரு புடைப்பு சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் சோழர் காலத்தை சேர்ந்த நடுகல்லாய் இருக்கவே வாய்ப்புண்டு. இவ்வகை நடுகற்களை நவகண்டம் என்பர். அவ்வீரன் யாருக்காக உயிர் கொடுத்தானோ அம்மக்களால் வழிபட வேண்டியவன். இதுவே தமிழர் அறம். அனால் இன்றோ அவ்வீரன் காட்சிபொருளாய் இலங்கை பொலன்னறுவையில். இதில் வேதனையும் வேடிக்கையும் என்னவென்றால் அந்த கல்லிற்கு கீழே வயிறை கிழித்து தற்கொலை செய்யும் கல் என்று அடிப்படை தொல்லியல் அறிவு இல்லாமல் பெயரிடப்பட்டுள்ளது. ஏன் இந்த அவலம்? கழுத்து எங்கே உள்ளது வயிறு எங்கே உள்ளது? ஒருவேளை வாய் என்பதை வயிறு என்று எழுதினார்களா என்று தெரியவில்லை. இலங்கை அரசில் தமிழில் பிழைகளுக்கா பஞ்சம்!? அவலம்!

மற்றொரு நடுகல்லை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

நன்றி!

வேல்கடம்பன்

Like this article?

Share on Facebook
Share on Twitter
Share on Linkdin
Share on Pinterest

Leave a comment