இலங்கையில் நடுகல் – 4

இலங்கையில் நடுகல் தேடிய பயணத்தில் கிழக்கு மாகாணத்தில் மூன்று நடுகற்களை சாலையோறோம் வயல்வெளியில் கண்டெடுத்தேன். நண்பர் பிரதீவன் மூலமாக இங்கு இந்நடுகற்கள் இருப்பதை அறிந்தேன். இவை மூன்றும் பழங்காலத்தவை அல்ல. மிகவும் சமீபத்தியவை ஆகும். இவை மூன்றும் மூன்று நபர்களின் இறப்பை சொல்லும் வகையில் அவர்கள் நினைவாய் வைக்கப்பட்ட நடுகலாகும்.

முதல் நடுகல்:

இக்கல்லானது 1919 ஆம் ஆண்டு உயிரிழந்த சேரவ்வி கணபதி என்பவருக்காக எடுக்கப்பட்ட கல். காலயுத்தி வருடம் தை மாதம் ரோகினி நட்சத்திரத்தில் இவர் பரமபதவி அடைந்தார் என கல்வெட்டு சொல்கிறது. இதில் எந்த புடைப்பு சிற்பங்களும் இல்லை. இக்கலானது ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும் போல தெரிகிறது. ஆனால் மண்ணில் சாய்ந்த நிலையில் புதைந்துள்ளது.

கல்வெட்டு வாசகம்:

1919 …தே

காலயுத்தி ௵

தை ௴ 27 தி

ஞாயிற்றுக்

கிழமையி

ல் ரோகினி ந

ட்சதிர…வ

பி தசமி திதியி

ல் சேரவ்வி க

ணபதிப்பி பர

ம பதவியடை

ந்தார்

நன்றி

வேல்கடம்பன்

Like this article?

Share on Facebook
Share on Twitter
Share on Linkdin
Share on Pinterest

Leave a comment